Windows Phone பயனர்களுக்கு மைக்ரோசொப்ட் தரும் அதிரடிச் சலுகை

விண்டோஸ் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட கைப்பேசிகளை அல்லது டேப்லட்களை பாவிப்பவர்களுக்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிய சலுகை ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது ஒன்லைன் சேமி
ப்பு வசதியை வழங்கும் Sky Drive இல் 20GB சேமிப்பு கொள்ளளவை இலவசமாக வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும் இவ்வசதி ஒரு வருட காலத்திற்கே இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தற்போது வழங்கப்படும் 7GB சேமிப்பு கொள்ளளவுடன் மொத்தமாக 27GB சேமிப்பு வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை பெற்றுக் கொள்வதற்கு 2014 ஜனவரி 31ம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?