Lenovo அறிமுகப்படுத்தும் அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசிகள்

Lenovo நிறுவனமானது அன்ரோயிட் இயங்குளத்தில் செயற்படக்கூடிய இரு வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துள்ளது.
S930 மற்றும் S650 ஆகிய கைப்பேசிகளில் S930 ஆனது 6 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resoution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.3GHz வே
கத்தில் செயற்படக்கூடிய MediaTek Processor, பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவை தவிர 8GB சேமிப்பு நினைவகம், 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1.6 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகிவற்றினையும் கொண்டுள்ளது. இதன் விலையானது 427 டொலர்கள் ஆகும்.
S650 கைப்பேசியானது 4.7 அங்குல அளவு, 540 x 960 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.3GHz வேகத்தில் செயற்படக்கூடிய MediaTek Processor, பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. இதன் விலையானது 366 டொலர்கள் ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3