Sony Xperia ZL ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகின


கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Sony ஆனது Xperia ZL எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தக் காத்திருக்கின்றது. இந்நிலையில் அக்கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூகுளின் Android 4.3 Jelly Bean இயங்குளத்தினை அடிப்படையாகக் கொண்டு
வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 5 அங்குல தொடுதிரையினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
மேலும் 1.5GHz வேகத்தில் செயலாற்றவல்ல quad-core Qualcomm Snapdragon S4 Pro processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும், 13 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளன.
இதேவேளை இக்கைப்பேசிகளில் கூகுளின் Android 4.4 KitKat இயங்குதளமும் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?