டுவிட்டரில் Blocking வசதி
பிரபல சமூக வலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் ஆனது Blocking வசதியினை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
பல மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட இத்தளமானது 2006ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுடன் அதிகபட்சம் 140 எழுத்துக்களை கொண்ட குறுஞ்செய்திகள் உட்பட ப
டங்களை நண்பர்களுடன் பகிரும் வசதியை வழங்கிவருகின்றது.
இதேவேளை தேவையற்ற பின்தொடர்பவர்களை நிறுத்தி வைக்கும் வசதியை ஏற்கணவே வழங்கியிருந்த அந்நிறுவனம் பின்னர் இடைநிறுத்தியிருந்தது.
எனினும் அவ்வசதியை மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளதாக கடந்த வாரம் அறிவித்துள்ளது.