Meizu அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகள்
சீனாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் Meizu நிறுவனமானது MX4 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்துகின்றது.
முதன் முறையாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இக்கைப்பேசி இரு வகைகளைக் கொண்டுள்ளது.
அவற்றில் ஒன்று 5.5 அங்குல அளவு மற்றும் 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினையும் மற்றையது 5 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினையும் கொண்டதாக காணப்படுகின்றது.
இவை எதிர்வரும் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.