கூகுள் மேப் சேவை விரிவுபடுத்தப்படுகின்றது
கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுவரும் கூகுள் மேப் சேவையானது மேலும் 25 நாடுகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்படவுள்ளது.
ஏற்கனவே இச்சேவையில் பல நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் அன்ரோயிட் சாதனங்களில் இச்சேவையை பயன்படுத்துபவர்களுக்காக ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் மேலும் சில நாடுகள் உள்ளடங்கலாக 25 நாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவை பின்வருமாறு Andorra, Bangladesh, Bhutan, Burundi, Central African Republic, Croatia, Djibouti, Gabon, Guadeloupe, Haiti, Lesotho, Libya, Maldives, Mongolia, Puerto Rico, Republic of Congo, Samoa, Serbia, Sierra Leone, Somalia, Togo, Tonga, Tunisia, Vanuatu, Zambia.
இந்த நாடுகளுடன் தற்போது கூகுள் மேப் சேவையில் மொத்தமாக 99 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.