Vivo அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி
Vivo நிறுவனமானது வினைத்திறன் வாய்ந்த புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
6 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட Xplay 3S எனும் இக்கைப்பேசியானது 2.3GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor மற்றும் பிரதான நினைவகமாக 3GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது
.
Android இனை அடிப்படையாகக் கொண்ட Funtouch இயங்குதளத்தினைக்கொண்டுள்ளதுடன், 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன.
32GB சேமிப்பு வசதியினைக் கொண்ட இதன் விலை 576 அமெரிக்க டொலர்கள் ஆகும்.