HTC-ன் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்


HTC நிறுவனம் தன் மொபைல் போன்களிலேயே மிக அதிக விலை மதிப்புமிக்க போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் விலை இந்திய ரூபாயின் மதிப்புபடி ரூ. 61,490.
இருப்பதிலேயே மிகப்பெரிய திரையாக 5.9 அங்குல திரை இதில் உள்ளது, இதுவரை 4.7 அங்குல அகலத் திரையினையே HTC தந்துவந்தது.

இதன் பின்புற கமெராவின் கீழாக ஸ்கேனர் ஒன்று தரப்பட்டுள்ளது, விரல் ரேகையினை இது உணர்ந்து, இந்த போனின் உரிமையாளர் மட்டுமே பயன்படுத்த வழிவகை செய்கிறது.
இதன் இரு மொடல்கள் 16 மற்றும் 32 ஜிபி மெமரியுடன் உள்ளன. இந்த போனைப் பயன்படுத்துபவர்கள், கூகுள் ட்ரைவில் 50 ஜிபி மெமரி இடத்தினை இலவசமாகப் பெறலாம்.
இதில் இணைத்து தரப்படும் பற்றரி 3,300 mAh திறன் கொண்டதாக உள்ளது. வழக்கமாக, 4 அங்குல திரை கொண்ட போன்களில், 1,800 முதல் 2,000 mAh திறன் கொண்ட பற்றரிகள் இணைக்கப்படும்.
இதன் திரை 5.9 அங்குல அகலத்தில் அமைக்கப்படுவதால், கூடுதல் திறனுடன் கூடிய பற்றரி தரப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?