ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான ஹேம் பேட்டினை அறிமுகப்படுத்தியது சம்சுங்
ஸ்மார்ட் கைப்பேசிகளில் ஹேம்களை இலகுவாக விளையாடுவதற்காக பல்வேறு நிறுவனங்கள் ஹேம் பேட்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
எனினும் முதன் முறையாக தனது ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான ஹேம் பேட்டினை
அறிமுகப்படுத்தியுள்ளது சம்சுங்.
அன்ரோய்ட் இயங்குதளத்தைக் கொண்ட சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகளிலும் 4 அங்குலத்திலிருந்து 6.3 அங்குலம் வரையான தொடுதிரையினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளிலும் இச்சாதனம் செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது.