Toshiba அறிமுகப்படுத்தும் Excite 7 அன்ரோய்ட் டேப்லட்

முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Toshiba ஆனது Excite 7 எனும் புத்தம் புதிய டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்த டேப்லட் 7 அங்குல அளவு மற்றும் 1024 x 600 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டதாக
காணப்படுகின்றது.
இதில் 1.6GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Cortex A9 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவை தவிர 8GB சேமிப்பு நினைவகம், 3 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 0.3 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் காணப்படுகின்றன.
இதன் விலையானது 170 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

அதிரடி சலுகையுடன் Ubuntu இயங்குதளத்தின் புதிய பதிப்பு

Samsung Galaxy Note 6 கைப்பேசியின் சிறப்பம்சங்கள் வெளியாகின