அப்பிள் மேப் சேவையினால் பேரிழப்பை சந்தித்தது கூகுள் மேப் சேவை


இணைய உலகில் பல்வேறு சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனத்தின் புகழ் பெற்ற ஒரு சேவையாக கூகுள் மேப் காணப்படுகின்றது.
இதேவேளை அப்பிள் நிறுவனமும் கூகுள் மேப் சேவைக்கு நிகராக அப்பிள் மேப் எனும் சேவையை வழங்கி வருகிறது.

அப்பிள் நிறுவனம் தனது மேப் சேவையை அறிமுகப்படுத்திய பின்னர் சுமார் 23 மில்லியன் வரையான பயனர்களை கூகுள் மேப் இழந்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ஒன்லைன் மேப் சேவையை பயன்படுத்தும் 81 மில்லியன் பயனர்களுடன் ஒப்பிடுகையில் கால் பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் தனது சேவையை அறிமுகப்படுத்தி ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் அப்பிள் நிறுவனம் தற்போது 35 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது.
இருந்த போதிலும் கூகுள் ஆனது 57.7 மில்லியன் பயனர்களுடன் தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?