Samsung Galaxy Win ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்
சம்சுங் நிறுவனமானது அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட Samsung Galaxy Win எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை தென் கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது.
4.8 அங்குல அளவு மற்றும் 800 x 480 Pixel Resolution
உடைய WVGA தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியில் 1.4GHz வேகத்தில் செயலாற்றும் Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியன காணப்படுகின்றன.
மேலும் 8GB சேமிப்பு கொள்ளளவினை கொண்டுள்ளதுடன் microSD கார்ட்டின் உதவியுடன் 32GB வரை அதிகரிக்கும் வசதியும் காணப்படுகின்றது.
152 கிராம்களே நிறையுடைய இந்த கைப்பேசியின் விலையானது 520 அமெரிக்க டொலர்களாகும்.