கூகுளின் மற்றுமொரு புதிய முயற்சி
இணைய உலகைக் கலக்கிவரும் கூகுள் நிறுவனமாது இலத்திரனியல் துறையில் பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறது.
இதன் ஒரு அங்கமாக தற்போது சாரதி அற்ற கார்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது
.
ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் இயக்கக்கூடிய இந்தக் காரில் 2 பேர் பயணிக்கக்கூடியதாக இருப்பதுடன் இதன் சோதனை முயற்சி ஒன்று அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை இக்காரானது 2015 ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.