HP அறிமுகப்படுத்தும் Omni 10 விண்டோஸ் டேப்லட்

முதற்தர கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான HP ஆனது Omni 10 எனும் புத்தம் புதிய டேப்லட்டினை அறிமுகப்படுத்துகின்றது.
விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் இந்த டேப்லட் ஆனது 10.1 அங்குல அளவுவுடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் 1.46 GHz வேகத்தில் செயற்படக்கூடிய Intel Atom Z3770 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் சேமிப்பு நினைவகமாக 32GB கொள்ளளவினையும் உடையதாகக் காணப்படுகின்றது.
இவற்றுடன் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இதன் விலையானது 399 டொலர்கள் ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?