கூகுள் ஸ்ட்ரீட் சேவையில் மற்றுமொரு புரட்சி
உலகின் பல்வேறு பகுதிகளையும் ஓரிடத்திலிருந்துகொண்டே இரசிக்கும் வசதியையும், பயணங்களை மேற்கொள்வதற்கான வழிகாட்டி வசதியையும் கூகுள் ஸ்ட்ரீட் வியூ சேவை வழங்கிவருகின்றது.
தற்போது இச்சேவையில் விமான நிலையங்கள் மற்றும் பிரபல்யமான புகையிரத நிலையங்கள் என்பவற்றினையும் உள்ளடக்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் முதன் முறையாக 16 சர்வதேச விமான நிலையங்கள், ஐம்பதிற்கும் மேற்பட்ட புகையிரத நிலையங்கள் மற்றும் ஹொங்கொங் நாட்டிலுள்ள கார் பிளாட்போம் ஒன்றினையும் உள்ளடக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.