புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்தது Huawei
முன்னணி கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Huawei ஆனது தனது புதிய உற்பத்தியான Ascend Mate 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.
இக்கைப்பேசியானது 6.1 அங்குல அளவு மற்றும்1920 x 1080 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக்
கொண்டுள்ளது.
மேலும் 1.6Ghz வேகத்தில் செயலாற்றவல்ல Quad Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, என்பனவற்றினையும் சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவையும் கொண்டுள்ளது.
கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக்கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 1 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றனவும் காணப்படுகின்றது.
E