அட்டகாசமான வசதிகளுடன் Google Nexus 5 Smartphone
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் கூகிள் நெக்சஸ் 5 ஸ்மார்ட்போன், தற்பொழுது இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. கூகிள் பிளே ஸ்டோர் தளத்திலும் தகவல்களை வெளியிட்டு கூகிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
கூகிள் நெக்சஸ் 5 ஸ்மார்போனில் உள்ள சிறப்பம்சங்கள்:
இரண்டு நிறம் மற்றும் இரண்டு மெமரி ஸ்டோரேஜ் வசதிகளுடன் வெளியிடப்பட்டுள்ள கூகிள் நெக்சஸ் 5 ஸ்மார்ட் போனில் 4.95 அங்குல திரை அகலம் (full HD IPS display), 2.3 GHz Qualcomm Snapdragon 800 Processor, 2ஜிபி ரேம், சிறப்பான வீடியோ மற்றும் போட்டோக்களை எடுக்கப் பயன்படும் 8 மெகா பிக்சல் கேமரா, வீடியோ சாட்டிங் மற்றும் முகம் பார்த்துப் பேசப் பயன்படும் வீடியோ அழைப்பை மேற்கொள்ள 1.3 மெகா பிக்சல் முன்பக்க கேமரா, 17 மணி நேரம் தொடர்ந்து பேசுமளவிற்கு மின்சக்தியை வழங்கும் திறன், மற்றும் 300 மணி நேரம் மின்சக்தியை தேக்கி வைக்கும் திறன் 2300 mAh பேட்டரிஆகியன அமைந்துள்ளன.