குழந்தைகளுக்கான Samsung Galaxy Tab 3 அறிமுகம்
எதிர்வரும் 10 ஆம் திகதி அமெரிக்காவிலும், தென் கொரியாவிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த டேப்லட்டினை விரைவில் ஏனைய நாடுகளிலும்
பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 அங்குல தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட் கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
மேலும் 1.2GHz வேகத்தில் செயலாற்றும் Processor, 1GB RAM ஆகியவற்றினையும் 8GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவற்றடன் 3 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1.3 மெகாபிக்சல்கள் உடைய துணையான கமெரா போன்றனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.