நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய போர்ட்டேபிள் ஸ்பீக்கர் அறிமுகம்

Favi நிறுவனமானது புளூடூத் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டதும் இலகுவாக எடுத்துச்செல்லக்கூடியதுமான ஸ்பீக்கர்களினை அறிமுகம் செய்துள்ளது.
Boomerang, Boomerang Mini என்ற இரண்டு வகை பதிப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வெள்ளை, கறுப்பு, மஞ்சள்
எனும் மூவகை நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள Boomerang ஸ்பீக்கர் ஆனது 7.83 x 8.2 x 2 அங்குல அளவு கொண்டதாகவும், 6 W சக்தியினை வெளிவிடக்கூடியதாகவும் இருக்கின்றது.
இதன் பெறுமதியானது 79.99 டொலர்களாகும்.
இதேவேளை Boomerang Mini 4 W சக்தியினை வெளிவிடக்கூடியதாகவும், 5.91 x 6.12 x 1.49 அங்குல அளவுடையதாகவும் காணப்படும் அதேவேளை இதன் விலையானது 59.99 டொலர்களாக காணப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?