தடைசெய்யப்பட்ட தளத்தில் இருந்து தகவல்களைப் பெறும் வழி
தடை செய்யப்பட்ட தள தகவல்களை எப்படி தெரிந்துகொள்வது? சில இடங்களில் கணினி தகவல் சம்பந்தப்பட்ட தளங்களை கூட இண்டர்நெட் சரிவீஸ் புரைவைடர்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக தடை செய்திருப்பார்கள் அந்த நேரத்தில் புராக்ஸி சர்வரும் கூட உதவாது. அப்படியான நிலை ஏற்படும்போது பின்வரும் வழியினை பின்பற்றவும் அதற்கு உங்களிடம் அவசியம் ஒரு மின்னஞ்சல் முகவரி இருக்கவேண்டும். உதாரணத்திற்கு ஜிமெயிலை எடுத்துக்கொள்வோம். உங்கள் ஜிமெயில் மின்னஞ்சலை திறந்து அனுப்ப வேண்டிய முகவரியில் www@web2mail.com என்பதை எழுதவும். இனி சப்ஜெகட் என்பதில் தடை செய்யப்பட்ட இனையதளத்தின் முகவரியை கொடுக்கவும். இனி வேறு ஒன்றும் செய்யவேண்டாம் அப்படியே மின்னஞ்சலை அனுப்பி விடுங்கள் குறைந்த பட்சம் நான்கு மணி நேரத்திற்குள் தடை செய்ப்பட்ட தளத்தில் உள்ள தகவல்கள் உங்கள் இன்பாக்ஸில் இருக்கும் சில நேரம் நேரம் கூடுதல் ஆகலாம் ஆனாலும் தகவல் எப்படியும் வந்துவிடும்.
இதில் ஒரு பிரச்சினையும் இருக்கிறது. அதாவது நீங்கள் பார்க்க விரும்பும் தளத்தில் வீடியோ அல்லது இமேஜ்கள் இருக்குமானால் அவை உங்கள் இன்பாக்ஸிற்கு வராது டெக்ஸ்ட்டுகள் மட்டுமே வரும்.