உயரத்தில் இருந்து குதிக்கணும்! கூகுளின் இன்றைய டூடுள்
பிரான்சை சேர்ந்த ஆன்ட்ரே-ஜாக்ஸ் கார்னெரின் என்பவர் 1797ம் ஆண்டு அக்
டோபர் மாதம் 22ம் திகதி சில்க் பாராசூட் மூலம் 3,000 அடி உயரத்தில் இருந்த பலூனில் இருந்து குதித்தார்.
அதன் பிறகு அவர் உலகப் பிரபலம் ஆனார். அவர் இந்த அதிசயத்தை நிகழ்த்தி இன்றுடன் 216 ஆண்டுகள் ஆகிறது.
இதனை முன்னிட்டு கூகுள் சிறப்பான டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் பாராசூட்டுடன் கூடிய பலூன் மேலே பறந்து செல்கிறது. ஒரு அளவுக்கு சென்ற பிறகு அங்கிருந்து பாராசூட் மூலம் அதில் உள்ள மனிதர் கீழே குதிக்கிறார்.
டூடுளில் இருக்கும் இரண்டு பட்டன்கள் மூலம் பாராசூட்டை இடது அல்லது வலது பக்கமாக நீங்கள் திசை திருப்பலாம் அல்லது உங்கள் மவுஸ் மூலம் பாராசூட்டின் திசையை நிர்ணயிக்கலாம்.
மேகங்கள், பறவைகளைத் தாண்டி பாராசூட் தரையிறங்கியவுன், அதில் உள்ள மனிதர் தனது தொப்பியை கழற்றி ஆட்டுகிறார்.