அன்ரோயிட், விண்டோஸ் டேப்லட்களை அறிமுகப்படுத்தும் டெல்
இவற்றுள் Venue 8, Venue 7 எனும் டேப்லட்கள் கூகுளின் Android 4.2.2 Jelly Bean
இயங்குதளத்தினைக் கொண்டுள்ளதுடன் 8, 7 அங்குல அளவுடைய தொடுதிரையினை கொண்டுள்ளன.
இவற்றின் சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவு தரப்பட்டுள்ளது.
மேலும் Venue 7 இன் விலையானது 149 டொலர்களாவும், Venue 8 இன் விலை 179 டொலர்களாகவும் காணப்படுகின்றது.
இவற்றுடன் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினைக் கொண்ட Venue 8 Pro, Venue 11 Pro ஆகிய டேப்லட்களையும் அறிமுகப்படுத்துகின்றது.
Venue 8 Pro டேப்லட்டின் விலை 299.99 டொலர்களாகவும், Venue 11 Pro டேப்லட்டின் விலை 499.99 டொலர்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.