Lenovo அறிமுகப்படுத்தும் Windows 8.1 டேப்லட்

Lenovo நிறுவனம் Windows 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட தனது புதிய வடிவமைப்பான Miix2 எனும் டேப்லட்டினை அறிமுகம் செய்கின்றது.
8 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட்டின் பார்வைக் கோணமானது 178 டிகிரியாக காணப்படுகின்றது.

மேலும் உயர் ரக கிராபிக்ஸ் மற்றும் வீடியோக்களை இயக்கக்கூடிய தொழில்நுட்பத்தினையும் இந்த டேப்லட கொண்டுள்ளது.
இவை தவிர சேமிப்பு நினைவகமாக 128 GB கொள்ளளவு, 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன.
இதன் விலையானது 299 டொலர்கள் ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

நீங்கள் "பென்ட் றைவ்" ஐ பயன்படுத்துபவரா..?