Assisted Global Positioning System என்றால் என்ன?
உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பு வசதி இருந்து அதனை இயக்கும் வசதியை உங்களுக்கு மொபைல் இணைப்பு
தரும் நிறுவனத்திடம் நீங்கள் பெற்றிருந்து அதனை இயக்கினால் சாட்டலைட்டிலிருந்து நிறுவனத்தின் சர்வர் வழியே உங்கள் மொபைல் போனில் தகவல்களைப் பெறலாம்.
இணையப் பக்கங்களைப் பார்வையிடலாம். ஜி.பி.எஸ். வசதி கொண்ட மொபைல் போன்களில் இந்த AGPS உதவி இல்லாமல் டேட்டா பெறலாம். ஆனால் அதற்கு நேரம் மிக மிக அதிகமாகும்.
அந்த சிரமத்தை இந்த தொழில் நுட்பம் குறைக்கிறது. ஆனால் உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் தொடர்பு வசதி இருப்பது கட்டாயமாகும்.