தொழில்நுட்பத்தின் வளர்ச்சி: அதிநவீன ஹெல்மெட் அறிமுகம்
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலேயே இந்த உயர் தொழில்நுட்பம் கொண்ட
ஹெல்மெட்டை ஸ்கல் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இதன் மூலம் செல்ல வேண்டிய இடத்துக்கான வழிகளையும், வானிலை அறிவிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.
இதற்காக ஹெல்மெட்டின் வலது புறம் சிறிய அளவிலான காட்சிப்பலகை பொருத்தப்பட்டுள்ளது.
அதன் மூலம் பின்புறம் வரும் வாகனங்களையும் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த ஹெல்மெட் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.