Ubuntu இயங்குதளத்துடன் கூடிய மடிக்கணினிகளை அறிமுகப்படுத்துகின்றது Asus
Asus 1015E எனும் பெயர் கொண்ட இக்கணனிகள் 1.1 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Intel Celeron dual-core processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டு காணப்படுவதுடன் 10.1 அங்குல அளவு மற்றும் 1366
x 768 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் 7.5 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக மின்னை வழங்கக்கூடிய மின்கலத்தைக் கொண்டதும், 0.3 x 7 x 1.4 அங்குலம் என்ற அளவுப்பரிமாணமும், 2.8 பவுண்ட் எடையும் கொண்ட இச்சாதனத்தின் விலையானது 215 டொலர்கள் மட்டுமே.