Windows 8 இற்கு அழகிய தோற்றத்தில் Windows 8 Start Menu.
Windows 8 இற்கான Start Menu
நம்மில் அதிகமானோர் பயன்படுத்தும் இயங்குதளமென்றால் அது Windows ஆகும். நாம் இது வரை பயன்படுத்தி வந்த Windows OS களில் Start Menu இருந்து வந்தது. எனினும் அண்மையில் வெளிவந்த Windows இன் பதிப்பான Windows 8 இல் Start Menu எனும் ஒரு Option இருக்கவில்லை.
அதனால் தமது இயங்குதளத்தை Windows 8 இற்கு மாற்றிக்கொண்ட Windows 8 பயனர்கள் Start Menu இன் அருமையை புரிந்திருப்பார்கள்.
இதனை புரிந்து கொண்ட சில நல்ல மனிதர்கள் Windows 8 இற்கு என்றே அழகிய தோற்றத்தில் Windows 8 Start Menu ஐ தயாரித்துள்ளனர்.
Windows 8 Start Menu இன் சிறப்பம்சங்கள்
- Windows 8 இல் singing in ஆகிய உடன் விரைவில் தானாகவே செயற்படும்.
- Windows 8 இன் பாணியில் (தோற்றம்) Windows 7 Start menu இன் செயல்பாடுகளை கொண்டுள்ளது.
- Win key ஐ சுட்டும் போது இந்த Windows 8 Start Menu தோன்றுகிறது.
- Log off, lock மற்றும் turn off போன்ற option கள் காணப்படுகின்றது.
- அனைத்து பயனர் கணக்குகளுக்கும் ஆதரவளிக்கின்றது.
- உங்களுக்கு தேவையான அம்சங்கள் மற்றும் தோன்றும் வகையில்
Start Menu அமைத்திட வசதியுள்ளது.