அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகமாகும் Opera Webkit இணைய உலாவி
இணையப்பாவனையில் உலாவிகளின் பங்கு அளப்பரியதாகும். இவ்வாறான உலாவிகளில் முன்னணியில் திகழும் உலாவிகளுள் ஒன்றான Opera தற்போது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் சாதனங்களுக்காக Opera Webkit எனும் பெயரில் அறிமுகமாகவிருக்கின்றது.
தற்போது இதன் பீட்டா பதிப்பினை உருவாக்குவதில் ஈடுபடும் Opera நிறுவனம் சில புதிய அம்சங்களை இதில் உள்ளடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் புதிய பயனர் இடைமுகத்தினையும் உருவாக்கியுள்ளது.
புதிய அம்சங்களின் அடிப்படையில் உலாவியில் இணையப்பக்கத்தின் தோற்றத்தினை (Layout) மாற்றியமைக்கக்கூடியதாகக் காணப்படுவதுடன், பயன்படுத்தப்படும் சாதனத்திற்கு ஏற்ப Text Wrap வசதியையும் கையாள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.