Google Play Books தரும் புத்தம் புதிய வசதி
ஒன்லைன் மின் (eBooks) புத்தகங்களின் சங்கமமாகத் திகழும் Google Play Books சேவையானது தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அன்ரோயிட் சாதனங்களைப் பயன்படுத்தும் பயனர்கள் தமது மின்புத்தகங்களை பதிவேற்றும் வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
PDF கோப்பு வகையில் காணப்படும் மின் புத்தகங்களை பதிவேற்றும் வசதி இப்புதிய மேம்படுத்தலில் தரப்பட்டுள்ளதுடன் இச்சேவையில் மேலும் BookMarks, HighLight, Notes, மற்றும் Dictionary போன்ற
வசதிகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.