சுவாரஸ்யமான வீடியோ அழைப்புகளை ஏற்படுத்துவதற்கு உதவும் மென்பொருள்

தொலைத் தொடர்பாடல் வலையமைப்பின் மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் (3G) பயனாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ அழைப்புகள் தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதற்காக பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு இலவச அழைப்புகளை ஏற்படுத்துவதற்கான சேவைகளை வழங்கி வருவதுடன் பல அதிரடி சலுகைகளையும் அறிமுகப்படுத்திவருகின்றன.

இவ்வாறு வெப் கமெராக்களை பயன்படுத்தி வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தும்போது அதன் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்க ShineCam Pro எனும் மென்பொருள் உதவுகின்றது.
இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட எபெக்ட்கள் (Effects) காணப்படுகின்றன. இதன் மூலம் வீடியோ பின்னணிகளையும் மாற்ற முடியும்.
இம்மென்பொருளினை Skype, MSN Messenger, Yahoo, AIM, PalTalk, CamFrog போன்ற வீடியோ அழைப்பு சேவைகளின்போது பயன்படுத்த முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3