அப்டேட் ஆன பின் விண்டோஸ் இயங்குதளத்தில் கணணி தானாகவே மறுதொடக்கம் ஆவதை டிசேபிள் செய்ய


விண்டோஸ் இயங்குதளத்தை அப்டேட் செய்த பின் தானகவே மறுதொடக்கம் ஆகும். இவ்வாறு விண்டோஸ் இயங்குதளம் மறுதொடக்கம் ஆகும் போது அதில் ஒப்பன் செய்யப்பட்டிருந்த அனைத்து அப்ளிகேஷன்களும் மூடப்பட்டு விடும்.
ஒரு சில முக்கியமான வேலையில் இருக்கும் போது இப்படி நடந்தால் நம்மை எரிச்சலூட்டும். மேலும் இவ்வாறு மறுதொடக்கம் ஆவது கணனியின் வேகத்தை குறைக்கும்.

லினக்ஸ் இயங்குதளத்தில் அப்டேட் ஆன பின் லினக்ஸ் இயங்குதளம் மறுதொடக்கம் ஆகாது, ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் அவ்வாறு இல்லை. அப்டேட் ஆன பின் மறுதொடக்கம் ஆகும். இவ்வாறு மறுதொடக்கம் ஆவதை முழுவதுமாக ரத்து செய்ய விண்டோஸ் இயங்குதளத்தில் வழி உள்ளது.
முதலில் விண்டோஸ் மற்றும் R கீகளை ஒருசேர அழுத்தி ரன் விண்டோவினை ஒப்பன் செய்யவும் பின் gpedit.msc என்று உள்ளிட்டு ஒகே பொத்தானை அழுத்தவும்.
அடுத்து தோன்றும் விண்டோவில் Computer ConfigurationAdministrative TemplatesWindows ComponentsWindows Update என்னும் வரிசையில் தேர்வு செய்யவும். Windows Update யை கிளிக் செய்தவுடன் வலதுபுறம் தோன்றும் வரிசையில் No auto-restart with logged on users for scheduled automatic updates installations என்பதை இரட்டை கிளிக் செய்யவும்.
கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Enabled என்னும் ஆப்ஷன் பொத்தானை தேர்வு செய்து OK பொத்தானை அழுத்தவும்.
இனி விண்டோஸ் இயங்குதளம் அப்டேட் ஆன பின் தானகவே மறுதொடக்கம் ஆகாது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?