WEB APPS-களை உங்கள் கணினியில் பயன்படுத்துவதற்கு POKKI பயன்படுகிறது


நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8-ல் உங்களுக்குப் பிடித்த Web Appsநிறுவிக்கொள்ளுவதற்கு (Install) Pokki பயன்படுகிறது. சமூகத்தளங்கள், மின்னஞ்சல்கள், விளையாட்டுகள் மற்றும் இணையத்தளங்கள் போன்றவற்றை அந்த இணையத்தளம் ஒவ்வொன்றிக்கும் நீங்கள் சென்று பார்வையிடுவதற்குப் பதிலாக உங்கள் Windows Taskbar உள்ள Apps-கள் மீது ஒரு கிளிக் செய்வதன் ஊடாகவே அவற்றை பார்வையிட்டு பயன்படுத்துவதற்கு Pokkiபயன்படுகிறது.


உங்கள் கணினியில் நீங்கள் Pokki-யை நிறுவிய (Install) பின்னர் Windows Taskbar-ல் புதிதாக Pokki Menuஒன்று உருவாக்கப்பட்டிருக்கும் அதில் App Store என்ற Apps மீது கிளிக் செய்தால் பல Web Apps-களை நீங்கள் பார்க்கலாம், அவற்றில் உங்களுக்குப் பிடித்த Apps-களை கணினியில் நிறுவிக்கொள்ளலாம் (Install). நீங்கள் நிறுவிய Web Apps-கள் உங்கள் Windows Taskbar-ல் காணப்படும். அதன்பின் உங்களுக்குப் பிடித்த Apps மீது கிளிக் செய்து அவற்றைப் பார்வையிடலாம்.
Facebook, Twitter, Instagrille (Instagram), Gmail, Tube, Outlook, Yahoo! Mail, Pinterest, Google Reader, Simplenote மற்றும் விளையாட்டு Apps-கள் என்று பல தரப்பட்ட Apps-கள் Pokki-யின் App ஸ்ரோரில் காணப்படுகின்றன.
Pokki - gmail
Pokki விண்டோஸ் 7-னிலும் இயங்கக் கூடியது, புதிய விண்டோஸ் 8-லும் இயங்கிறது. Pokkiயின் Web அப்பிளிக்கேஷன்களை (Apps) நீங்கள் பயன்படுத்தும் போது உங்களுக்கு desktop-ப்பில் Mobile appsபயன்படுத்துவது போன்ற அனுபவத்தை அவை கொடுக்கின்றன. மற்றும் மின்னஞ்சல்கள் மற்றும் சமுகத்தளங்களின் Notifications போன்றவை Desktop தோன்றுகின்றன. அதிகமான Pokki-யின் Web அப்பிளிக்கேஷன்களை உங்கள் கணினியில் நிறுவினால் (Install) கணினியின் வேகம் குறைவைடையக் கூடும். ஆகையால் உங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் பதிவிறக்கிக் கொள்ளுங்கள். தேவையில்லாமல் Pokki-யின் Web அப்பிளிக்கேஷன்கள் தொடர்ந்து இயங்குவதை நிறுத்துவதற்கு Windows Taskbar உள்ள Pokki Menu மீது Right Click செய்து Sleep என்றதில் கிளிக் செய்யுங்கள்.
Pokki-facebook
Pokki Web Apps-கள் அறபுதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் சில குறைகளும் உண்டு. அவற்றை அவர்கள் திருத்தம் செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம். இது முற்றிலும் இலவசமானது அனைவரும் இதனை பதிவிறக்கிக் கொள்ளலாம்.

மேலதிக தகவல்களுக்கு இங்கே சென்று பாருங்கள் - Pokki

Download Pokki

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?