இனி SMSஅனுப்பி Mobile சார்ஜ் செய்யலாம் !

அதிவேக வளர்ச்சி கண்டுவரும் மொபைல் ஃபோன் தொழில்நுட்பத்தில் புது வரவாக ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் மொபைலில் சார்ஜ் நிரப்பும் தொழில்நுட்பம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் புதுப்புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வயது பாகுபாடின்றி அனைவராலும்
விரும்பப்படும் செல் ஃபோனை மிக சுலபமாக கையாள பல்வேறு தொழில்நுட்ப வளர்சிகள் உதவுகின்றன.

அவ்வகையில், செல் ஃபோன் பேட்டரி தீர்ந்துவிட்டால் ஒரு எஸ்.எம்.எஸ் மூலம் சார்ஜ் போட்டுக்கொள்ளும் தொழிநுட்பம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த பஃப்ல்லோ கிரிட் நிறுவனம் இதை அறிமுகம் செய்துள்ளது.

சூரிய ஒளியால் செயல்படும் இந்த தொழில் நுட்பத்தை பயன் படுத்த நிறைய செலவு ஏற்படாது எனவும், இதன் மூலம் மொபைல்களை சார்ஜ் செய்ய 1.5 மணி நேரம் ஆகும் எனவும், பஃப்ல்லோ கிரிட் நிறுவனத்தின் டேனியல் பெக்கேரா தெரிவித்தார்.

மின்சாரம் இல்லாத ஆப்பிரிக்க ஆசிய நாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி முதல் கட்டமாக ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

அதிரடி சலுகையுடன் Ubuntu இயங்குதளத்தின் புதிய பதிப்பு

Samsung Galaxy Note 6 கைப்பேசியின் சிறப்பம்சங்கள் வெளியாகின