Samsung Galaxy S4 கைப்பேசி விரைவில் Google Play தளத்தில்
கைப்பேசி உற்பத்தியில் அரசனாக திகழும் Samsung நிறுவனத்தின் புதிய அறிமுகமான Galaxy S4 ஸ்மார்ட் கைப்பேசிகளை எதிர்வரும் ஜுன் 26ம் திகதி முதல் கூகுள் பிளே தளத்திலிருந்து நேரடியாக கொள்வனவு செய்ய முடியும்.
அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசிகள் 5 அங்குல HD Super AMOLED தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.9 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Quad-Core Processor மற்றும் 2GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளன.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்கள் உடைய துணைக் கமெரா ஆகியனவும் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இவற்றின் சேமிப்பு நினைவகமானது 16 GB ஆகக் காணப்படுவதுடன் microSD கார்ட்டின் உதவியுடன் 64 GB வரை அதிகரிக்கவும் முடியும்.
இதன் பெறுமதியானது 649 டொலர்களாகும்.