சம்சுங் நிறுவனமானது Samsung Galaxy Mega 6.3 எனும் அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் ஜுலை மாதம் அறிமுகம் செய்கின்றது.
6.3 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 1.7GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM போன்றவற்றினையும் சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவையும் கொண்டுள்ளதுடன் இதனை microSD கார்ட்களின் உதவியுடன் 64GB வரை அதிகரிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.
மேலும் கூகுளின் Android 4.2 Jelly Been இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இக்கைப்பேசியில் 8 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் 1.9 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் காணப்படுகின்றன.
இவற்றின் அறிமுக விலையானது 459.99 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.