உலக அளவில் விண்டோஸ் 8 மென்பொருள் மாபெரும் வெற்றி
"விண்டோஸ் 8" மென்பொருள் வெளியிடப்பட்ட 6 மாதத்தில் 10 கோடி பேருக்கு விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.
உலகளவில் கணினி மென்பொருள் தயாரிப்பில் மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் விண்டோஸ் மென்பொருளின் பல்வேறு வடிவங்களை வெளியிட்டு வருகிறது.
கடைசியாக கடந்த 6 மாதத்துக்கு முன்பு "விண்டோஸ் 8" மென்பொருளை இந்நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த 6 மாத காலத்தில் 10 கோடி பேருக்கு "விண்டோஸ் 8" விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தொடுதிரை வசதிக்காக முதலில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம், டேப்லட் துறையில் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை.
விரைவில் "விண்டோஸ் 8" இன் மேம்படுத்தப்பட்ட மென்பொருளை விண்டோஸ் ப்ளூ என்ற பெயரில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட தீர்மானித்துள்ளது.