கணனியில் காணப்படும் தேவையற்ற கோப்புக்களை துல்லியமாக நீக்குவதற்கு

அன்றாட கணனிப் பாவனையின்போது தேங்கும் தேவையற்ற தற்காலிகமான கோப்புக்களின் பயனாக கணனியின் வேகம் பாதிக்கப்படுவதோடு, வன்றட்டின் இடவசதியும் வீணடிக்கப்படுகின்றது.
இவற்றினை தவிர்க்கும் முகமாக கணனியில் தேங்கும் தற்காலிக கோப்புக்களை நீக்க வேண்டியது அவசியமாகும். இதற்கென பல்வேறு மென்பொருட்கள் கிடைக்கப்பெறுகின்ற போதிலும் Tracks Eraser Pro எனும் மென்பொருளானது சாலச் சிறந்ததாகக் கருதப்படுகின்றது.

இம்மென்பொருளின் உதவியுடன் ஓரே கிளிக்கில் விண்டோஸின் தற்காலிக கோப்புக்கள் மற்றும் Cache, Cookies, தட்டச்சு செய்யப்பட்ட URL போன்றவற்றினையும் நீக்க முடியும்.
இவை தவிர உலாவிகளில் தங்கும் index.dat கோப்புக்களையும் துல்லியமாக நீக்குவதற்கு இம்மென்பொருள் பெரிதும் உதவிகரமானதாகக் காணப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?