சாம்சங் நடத்திய 5ஜி அலைக்கற்றை சோதனை வெற்றி

ஒரு விநாடியில் முழு திரைப்படத்தையும் தரவிறக்கம் செய்யும் அளவுக்கு அதிவேகம் கொண்ட ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை சோதனையை சாம்சங் நிறுவனம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் இதுகுறித்து தெரிவிக்கையில், தற்போதுள்ள அலைக்கற்றைகளில் 4ஜி தான் வேகமானதாக
கருதப்படுகிறது. ஆனால், அதை விட பல நூறு மடங்கு வேகம் கொண்ட 5ஜி தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. இதன்படி, 2 கி.மீ. தூர இடைவெளிக்குள் அமைந்த கணினிகளுக்குள் ஒரு ஜிகாபைட் பைல் ஒரு விநாடியில் பரிமாறப்பட்டது.

வரும் 2020 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இந்த தொழில்நுட்பம் வர்த்தக ரீதியில் பொதுமக்களுக்கு கிடைத்துவிடும். இதன் மூலம் 3டி படங்கள், நேரடி அறுவை சிகிச்சை காட்சிகள், அல்ட்ரா ஹை டெபனேசன் பைல்கள் உள்ளிட்டவற்றை, அளவின்றி வெகு விரைவாக பெற முடியும். நேரடி காட்சிகளை, உடனுக்குடன் காண்பதும் சாத்தியமாகும். இதற்காக 64 டைட்டன் தொழில்நுட்பத்தில் அமைந்த 64 கோபுரங்கள் அமைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே பூமிக்கு அடியில் வயர்களை பதித்து அதிகளவில் இணையதள இணைப்பு கொடுத்துள்ள நாடுகளில் தென் கொரியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem