பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியது Microsoft Xbox One !
மைக்ரோசொப்ட் தனது கேமிங் உபகரணமான Xbox 360 இன் அடுத்த வெளியீடாக Xbox one ஐ நேற்று வெளியிட்டது.
பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய இது பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. இவ்வருட இறுதியில் இது சந்தைக்கு விற்பனைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தனியாக கேமிங்களுக்கு மட்டும் செயற்படாது
பல்வேறு பொழுது போக்கு அம்சங்களை வழங்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை “all-in-one entertainment system” என மைக்ரோசொப்ட் வர்ணிக்கின்றது.
எக்ஸ்பொக்ஸ் இயங்குதளம் மூலமே இது இயங்குகின்றது.
இதன் தொழிநுட்ப அம்சங்கள் சில….
CPU with eight x86-64 cores
8 GB of DDR3 RAM
500 GB hard drive
Blu-ray Disc optical drive
4K resolution (3840×2160) video output Support
7.1 surround sound
Built-in Skype
Set-top box integration
இதனை குரலால் மற்றும் அசைவுகளுக்கு ஏற்பட்ட இதனை முற்றாக கட்டுப்படுத்தமுடியும். இதனால் டிவியை பார்க்கவோ, இணையத்தை உபயோகிக்கவோ, செனல்களை மாற்றுவதையோ இலகுவாக மேற்கொள்ள முடியும். இது மட்டுமன்றி ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடியதாக X பொக்ஸ் 1 உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக படங்களை பார்த்த வண்ணம் மின்னஞ்சல்களை வாசிக்க முடியும்.
மைக்ரோசொப்ட் இதற்கான தனது கினெக்ட் மோஷன் சென்சிங் தொழிநுட்பத்தை முற்றிலுமாக மீள வடிவமைத்துள்ளது. இது என்ன விலையில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என மைக்ரோசொப்ட் அறிவிக்கவில்லை. இதன் முன்னைய வெளியீடான Xbox 360 ஆனது உலகம் பூராகவும் 77 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.