அஸ்தமனத்தை நோக்கி Google Buzz - பதிவுகளை மீட்க கூகுள் தரும் புதிய வசதி
பிரபல இணைய சேவையை வழங்கிவரும் நிறுவனான கூகுள் நிறுவுனத்தின் சேவைகளில் ஒன்றான Google Buzz சேவையை நிறுவத்துவதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதனால் இதுவரை காலமும் இச்சேவையைப் பயன்படுத்திய பதிவுகளை (Posts) பகிர்ந்து வந்த பயனர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனினும் இப்பாதிப்பை தவிர்க்கும் வகையில் கூகுள் நிறுவனமானது Google Buzz சேவையில் பகிரப்பட்ட பதிவுகளை நேரடியாக Google Drive - இற்கு மாற்றுவதற்கான வசதியினை எதிர்வரும் ஜுலை 17ம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டு வருகின்றது.
இதேவேளை Google Drive சேவையில் பிரத்தியேக (Private) மற்றும் பொதுவான (Public) முறைகளில் கோப்புக்களை கையாளும் வசதி காணப்படுவதனால் Google Buzz பதிவுகளை பொதுவான பாவனைக்கு விடுவதன் மூலம் ஏனையவர்களால் அதனை பார்வையிடக் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.