ஆடைகள் வடிவமைக்க அசத்தலான ஐடியாக்களை கொடுக்கும் பயனுள்ள தளம்.

மானத்தை மறைக்கத்தான் ஆடை என்று இருந்தது ஒரு காலத்தில் ஆனால் தற்போது ஆடை வடிவமைப்பில் நாளும் பல்வேறு கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாது அத்தனையும் மக்களிடம் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது அந்த வகையில் இன்று
நாம் பார்க்க இருக்கும் தளத்தில் ஆடைகள் உருவாக்க பலவிதமான புதுமையான  ஐடியாக்களை அள்ளி கொடுக்கிறது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

ஆடையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் முதல் கல்லூரி  மாணவர்கள், பள்ளி மாணவர்கள் , குழந்தைகள்  என அனைவரும் தங்களுடைய உடல் வடிவமைப்புக்கு தகுந்தாற் போல் எப்படி எல்லாம் ஆடை வடிவமைத்தால் நன்றாக
இருக்கும் என்பதை சொல்வதற்காக இந்தத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி : http://costumeideazone.com

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Unique Costume Ideas, Costume Ideas for Couples, Costume Ideas for Groups ,Traditional Costume Ideas, Quick & Easy Costume Ideas என்று இருக்கும் தலைப்புகளில் நமக்கு வேறுபட்ட வடிவமைப்புக்கொண்ட ஆடைகளின் ஐடியாக்களை தெரிந்துகொள்ள Unique Costume Ideas என்ற பக்கத்திலும், திருமண ஜோடிகள் ,குரூப் நண்பர்கள் ஆடைகள், விழாக்கால ஆடைகள். எளிமையான ஆடைகள் என்று பல்வேறுப்பட்ட மக்களும் தாங்கள் விருப்பபடி தங்களுக்கு பிடித்தமான துறையில் ஆடைகளை தேர்ந்தெடுத்து அதில் தெரிவித்தப்படி நமக்கு தேவையான ஆடைகளை புதுமையாக வடிவமைத்து அனைவரின் பாராட்டையும் பெறலாம். ஆடை வடிவமைப்பாளர்கள் மட்டுமல்லாது ஆடை வடிவமைப்பில் ஈடுபாடுள்ள அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?