ஸ்கைப்பில் பரவும் கொடிய வைரஸ்: எச்சரிக்கை!!!

வெளிநாட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் இலவசமாக எளிதில் பேச இன்று பலரும் பயன்படுத்துவது ஸ்கைப் நெட்வொர்க்கை தான்.
இதில் இருக்கும் ஆபத்துகள் உண்மையில் பலருக்கு தெரிவதில்லை ஸ்கைப்பில் நீங்கள் உரையாடுவது பதிவு செய்யப்படுகின்றது அது தெரியுமா உங்களுக்கு.

மேலும், ஸ்கைப்பில் இருக்கும் வைரஸ் தான் இணையத்திலேயே மிக கொடுமையான வைரஸ். இந்தியாவில் ஸ்கைப் பயன்படுத்துவோர் பெற்று வரும், கெடுதல் விளைவிக்கும் ஸ்பாம் மெயில் குறித்து எச்சரிக்கை கொடுத்து வந்தது.
தற்போது இந்த ஸ்பாம் வேகமாகப் பரவி வருவதாக அறிவித்துள்ளது. இந்த வைரஸ் உங்கள் கணனியை என்னென்ன செய்யும் என்று தெரிந்தால் சற்று அதிர்ந்தே போய்விடுவீர்கள்.
இந்தியாவில் மட்டுமே இது வேகமாக இயங்கி வருகிறது. ஸ்கைப் பயன்படுத்துவோரின் காண்டாக்ட் முகவரி எளிதாக அவர்களைச் சென்றடையும்.
இதில் ஏதேனும் ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்தால், கெடுதல் விளைவிக்கும் வைரஸ் புரோகிராம், கணனியில் வந்து விடும்.
பின்னர் இந்த புரோகிராம், கணனியில் தரப்படும் பெர்சனல் தகவல்களை, இணையம் மற்றும் வங்கி கணக்குகளுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை, தொலைவில் உள்ள இன்னொரு சர்வருக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறது.
அதனை இயக்குபவர், அங்கிருந்தே, உங்கள் கணனியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இந்த வைரஸ் புரோகிராம் செயல்படும்.
இதனைத் தவிர்க்க, ஸ்கைப் காண்டாக்ட் முகவரியில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து வரும் இன்ஸ்டண்ட் மெசேஜில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்திடக் கூடாது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3