ஒன்லைன் மூலமாக தரவுகளைச் சேமிக்கும் வசதியைத் தரும் முன்னணி தளங்களுள் ஒன்றான மைக்ரோசொப்ட்டின் SkyDrive ஆனது தற்போது 250 மில்லியன் பயனர்களை எட்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆரம்ப காலத்தில் Windows Live SkyDrive, Windows Live Folders போன்ற பெயர்களால் அழைக்கப்பட்ட இத்தளமானது தற்போது Microsoft SkyDrive என அழைக்கப்படுவதுடன் மொபைல்கள், மடிக்கணினிகள்
மற்றும் டெக்ஸ்டாப் கணினிகள் என்பவற்றிலுள்ள இணைய உலாவிகள் மூலமாக இவ்வசதியைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகக் காணப்படுகின்றது.
இவ்வாறிருக்கையில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் கடந்த வருடம் வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளத்தின் ஊடாக சுமார் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் புதிதாக இணைந்துள்ளனர் எனவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது