நீர் மற்றும் தூசிகளிடமிருந்து பாதுகாப்புடைய LG Optimus GJ கைப்பேசிகள்

முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான LG நிறுவம் Optimus GJ எனும் தொடரைக்கொண்ட அதிநவீன கைப்பேசிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இக்கைப்பேசிகள் நீர் மற்றும் தூசிகளிலிருந்து மிகுந்த பாதுகாப்புடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் கூகுளின் Android 4.1.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன.

மேலும் 4.7 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Qualcomm Snapdragon S4 Pro Processor, 13 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா போன்றனவும் காணப்படுகின்றன.

இவற்றின் சேமிப்பு நினைவகமானது 16GB கொள்ளளவு உடையது, அத்துடன் 2,280 mAh மின்கலத்தை உள்ளடக்கியுள்ள இவை சுமார் 30 நிமிடங்கள் வரை நீரில் பழுதடையாது இருக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளனு. இவற்றின் விலையானது 600 டொலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?