Celkon அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி

Celkon எனும் நிறுவனம் Signature one A107 எனும் புத்தம் புதிய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது.
இது 5 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 148x77.2x9.6 mm எனும் அளவுப் பரிமாணத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கூகுளின் Android 4.0 ICS இயங்குதளப் பதிப்பை கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1GHz வேகத்தில் செயலாற்றும் Dual Core Processor, 512 MB RAM போன்றவற்றினையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
டுவல் சிம் வசதியுடன் கூடிய இக்கைப்பேசியில் 8 மெகாபிக்சல் உடைய பிரதான கமெரா மற்றும் VGA கமெரா போன்றனவும் காணப்படுகின்றன.
இதன் சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 32 GB வரை அதிகரித்துக் கொள்ளக்கூடியவாறு அமைந்துள்ளதுடன் 2G, WiFi, Bluetooth போன்ற வலையமைப்பு வசதிகளும் தரப்பட்டுள்ளன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?