Windows 8 இல் Metro முகப்பை நீக்குவது எப்படி?


Windows 8 இல் Metro UI என அழைக்கப்படும், விண்டோஸ் ஆரம்பிக்கும்போது தோன்றும் முகப்பு பக்கத்தை பலரும் விரும்புவதில்லை. விண்டோஸ் ஆரம்பிக்கும்போது நேரடியாக Desktop இற்கு போவதையே விரும்புகின்றனர்.
ஆகவே இந்த முகப்பை நீக்கிவிடுவதன் மூலம் நாம் விரும்பியபடி விண்டோஸ் ஆரம்பிக்கும்போது நேரடியாகவே Desktop இற்கு போய்விடலாம். இதற்கு சில Third Party மென்பொருள்கள் உதவி செய்கின்றது.  அவை பற்றி பார்க்கலாம்

Thinix (paid)

Thinix எனப்படும் இந்த சிறிய டூலை நிறுவிக்கொள்வதனூடாக Metro UI இனை விண்டோஸ் 8 இல் இருந்து அகற்றிவிடலாம். இந்த டூல் மூலமாக Metro UI இனை நீக்குவது மாத்திரமல்லாது மேலும் சில வசதிகளையும் ஏற்படுத்திக்கொள்ளலாம். விண்டோஸ் 7 இல் உள்ளதுபோன்ற Start Menu, Hot Corner இனை Disable பண்ணலாம், Table View என்னும் Explorer, Shutdown,Restart வசதிகள் என பலதரப்பட்ட வசதிகளை இந்த டூல் கொண்டுள்ளது. ஆனால் இதன் license இனை பெறுவதற்கு சிறியதொரு கட்டணத்தினை செலுத்தவேண்டும். ( Free version – 7 Days Trial)

தரவிறக்க இணைப்பு : Thinix

winaero (Free)

கட்டண மென்பொருளை வாங்கமுடியாதவர்கள் இந்த டூலை உபயோகிக்கலாம். இது முற்றிலும் இலவசமானது. Thinix போன்று பல்வேறு வசதிகளை கொண்டிருக்காவிடினும் இதன்மூலம் Metro UI இனை அகற்றிக்கொள்ளலாம்.

தரவிறக்க இணைப்பு : winaero 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு