உங்களுக்குப் பிடித்த Websitகான Shortcut உருவாக்குவது எப்படி?

ஒவ்வொரு நாளும் ஏதேனும் புதுமையைச் செய்துகொண்டிருக்கிறது தொழில்நுட்பம்(New Technology). தொழில்நுட்பம் இல்லையென்றால் இன்று வாழ்வே இல்லை என்ற நிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது உங்களுக்கும் தெரியும்.

கணினியைப் பயன்படுத்துபவர்கள் இணையத்தைப் பயன்படுத்தாமலிருக்க முடியாது. இணையத்தைப் பயன்படுத்துபவர்கள்.
முக்கிய சமூக தளங்களைப் (Social websites)பயன்படுத்தாமல் இருக்க முடியாது. எத்தனையோ லட்சக்கணக்கான இணையதளங்களை(websites) பார்வையிட முடிகிறது. அதிலிருந்து தேவையான தகவல்களை நாம் பெற்றுக்கொள்ள முடிகிறது.
கணினியில் சின்ன சின்ன செயல்களைச் செய்வதன் மூலம் நம்முடைய நேரத்தையும், வேலையையும் மிச்சப் படுத்தலாம். அந்த வகையில் நாம் காணவிருப்பதுதான் இன்றைய பதிவின் தலைப்பான  உங்களுக்குப் பிடித்த வலைத்தளதிற்கான குறுக்கு விசை உருவாக்குவது எப்படி?  என்பது.
உங்களுக்குப் பிடித்த வலைத்தளதிற்கான குறுக்கு விசை உருவாக்குவது எளிமையானதொரு வழிமுறைதான். படங்களை உற்று கவனியுங்கள். கீழ்வரும் குறிப்புகளில் உள்ளதைப்போன்று செய்து பாருங்கள்.
1. முதலில் உங்கள் கணினியில் Desktop-ல் வெற்றிடத்தில் வைத்து right Click செய்யுங்கள்
2. பிறகு தோன்றும் பெட்டியில் New என்பதில் கிளிக் செய்யுங்கள்.
3. அதில் தோன்றும் வசதியில் Create Short Cut என்பதை தேர்ந்தெடுங்கள்.
4. அடுத்து ஒரு பக்கம் தோன்றும். அதில் இவ்வாறு ஒரு விண்டோ தோன்றும்.
5. அதில் உங்களுக்கு விருப்பமான வலைத்தளத்தின் முகவரியை (URL)தட்டச்சிடவும்.
6. அடுத்து NEXT என்ற பட்டனைச் சொடுக்கவும்.
7. தோன்றும் பெட்டியில் Type a name for this Shortcut என்னும் வரிக்கு கீழாக உள்ள பெட்டியில், நீங்கள் URL உள்ளிட்ட வலைத்தளத்தின் பெயரை எழுதவும். நான் நமது வலைத்தளமான Thangampalani Blog என உள்ளிட்டிருக்கிறேன்.
8. இறுதியாக Finish என்ற பட்டனை அமுக்குவதன் மூலம் நீங்கள் நினைத்த செயல் நிறைவடைந்தது.
இப்போது நீங்கள் உங்கள் Desktop செல்லுங்கள்.(Desktop எளிதாக செல்ல இரண்டு குறுக்கு விசைகள் உண்டு. அவை Start button + D அல்லது Start button+M ஆகிய இரு குறுக்குவிசைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.) அங்கு நீங்கள் உருவாக்கி உங்கள் தளத்திற்கான குறுக்குவிசை படம் காட்சியளிக்கும்.
குறிப்பு. நீங்கள் உருவாக்கிய shortcut ஆனது உங்கள் கணினியில் எந்த வகை பிரௌசர் Default ஆக இருக்கிறதோ அதனுடைய லோகோவின் வடிவில்தான் Shortcut அமையும். நீங்கள் IE Browser -ஐ டிபால்ட்டாக பயன்படுத்தினால் IE -ன் லோகோ படத்துடன் Shortcut அமைந்திருக்கும்.
இவ்வாறு அமைந்த Shortcut-னை இருமுறை கிளிக் (Double Click) செய்யும்போது உங்களுக்கு விருப்பமான வலைத்தளம் திறந்துகொள்ளும். இதற்காக நீங்கள் ஒவ்வொரு முறையும் பிரௌசரின் அட்ரஸ் பாரில் உங்கள் வலைத்தளத்தின் முகவரியை தட்டச்சிட்டுக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதே முறையில் நீங்கள் எத்தனை தளங்களுக்கு வேண்டுமானாலும் shortcut அமைத்துக்கொள்ளலாம்.
கூடுதலாக இந்த படிமுறையையும் செய்தால் ஒரே கிளிக்கில் உங்களுக்கு பிடித்தமான வலைத்தளத்தை எளிதாக திறக்கலாம்.
இதற்கு நீங்கள் உருவாக்கி Shortcut Icon-ஐ இழுத்து டாஸ்க்பாரில் விட்டால் போதும். அது உங்களுடைய பிரௌசருடன் Pin ஆகிவிடும். அதாவது இணைந்துவிடும்.
நீங்கள் அத்தளத்தை திறக்க எண்ணும்போதும் டாஸ்க்பாரில் உள்ள பிரௌசர் ஐகானில் ரைட் கிளிக் செய்தால் நீங்கள் உள்ளிட்ட பெயருடன் ஒரு சிறிய ஐகான் தெரியம். அதில் ஒரு கிளிக் செய்தாலே போதும். உங்களின் விருப்பமான தளம் திறந்துகொள்ளும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு