பூச்சியினங்களின் மனதைக் கட்டுப்படுத்தும் ஐபோன் அப் |ரோபோ ரோஹ் (RoboRoach) செயலி(app)

நீங்கள் இதுவரை புளூடூத் (Bluetooth) தொழிநுட்பம் மூலம் இயங்கும் செயற்கைக் கரப்பான் பூச்சிகளைப் பயன்படுத்தி அவற்றின் மூளை செயற்பாடு, தழுவல் ஆகியவற்றைக் கற்கும் முறை குறித்துக் கேள்விப் பட்டுள்ளீர்களா?
நிச்சயம் இருக்காது. ஏனெனில் அத் தொழிநுட்பம் இன்னமும் முழுமையாகத்
தயாராகவில்லை.

எனினும் Backyard Brains எனும் நரம்பியல் கல்வி மற்றும் ஆராய்ச்சித் திணைக்களம் முதன் முறையாக வர்த்தக ரீதியில் கிடைக்கப் பெறும் முதல் செயற்கை பூச்சி உணர் கருவியினை Kickstarter நிறுவனம் மூலம் அறிமுகப் படுத்தி உலகம் முழுதும் இணைய வாயிலாகப் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
பல்கலைக் கழகத்தில் ஆரம்பப் பாடத்திட்டத்தில் நரம்பியல் குறித்த கல்வியினைக் கற்பதற்கு உதவியாக பூச்சிகளுக்கு (கரப்பான் பூச்சி உட்பட) பொருத்தி ஆய்வு செய்யும் ரோபோ ரொஹ் (RoboRoach) எனும் கருவியினை நீண்ட கால முயற்சியில் உருவாக்கி இவர்கள் சாதனை படைத்துள்ளனர். மேலும் புதன்கிழமை ஸ்காட்லாந்தில் இருந்து TEDGlobal வாயிலாக இக்கருவி குறித்து பல்கலைக் கழக மாணவர்களுக்கு விளக்கியது மட்டுமன்றி எமது சமூகத்திற்கு இக்கருவி எவ்வாறு பொருந்தும் எனவும் அவர்கள் தெளியப் படுத்தி இருந்தனர்.

இன்று உலக சனத்தொகையில் 20% வீதமான மக்களுக்கு Alzheimer's அல்லது Parkinson's போன்ற நரம்பியல் குறைபாடு இருப்பதாக காகே எனும் நிபுணர் தெரிவித்துள்ளார். இதனால் மனிதனின் மூளையைப் போன்றே அதிர்ச்சியலைகளை (Spikes) இனை பூச்சிகளின் மூளையும் உற்பத்தி செய்வதால் இக்கருவி மூலம் இவற்றை பதிவு செய்து நமது மூளையில் என்ன நடைபெறுகின்றது என அறிய முடியும் என்கிறார்கள் இவர்கள்.

இந்த ரோபோ ரோஹ் கருவி ஒரு விளையாட்டுப் பொருள் கிடையாது. ஒரு கற்கும் உபகரணம். இதை உபயோகிப்பதற்கான செயலியை (App) ஐ போனில் நிறுவினால் ஒரு மோபைல் மூலமாகக் கூட இப்பூச்சிகளுக்குக் மின் அதிர்ச்சி (electrical pulse) மூலம் கட்டளைகளைப் பிறப்பித்து அவற்றின் மூளை இயங்கும் விதத்தை அனுமானிக்க முடியும்.

சிறுவர்களால் கூட இலகுவில் பாவிக்கக் கூடிய விதத்தில் எளிமையாக வடிவமைக்கப் பட்டுள்ள ரோபோ ரோஹ் கருவிகள் தற்போது உயர்நிலை பள்ளிகளுக்கும் ஆய்வு கூடங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கும் விற்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதை உருவாக்கும் விதமும் கருவி மூலம் கரப்பான் பூச்சியொன்றை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றனர் என்பதையும் இந்த வீடியோவில் பார்வையிடுங்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு