120 கிராம் எடையுள்ள உலகின் மிக ஒல்லியான அசென்ட் பி6 கைபேசி அறிமுகம்
6.18 மி.மீட்டர் பருமன் கொண்ட இந்த கைபேசியை ஜூன் 18 அதாவது 6/18 அன்று அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டது. அதன்படி, ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் கோலோச்சும் ஸ்மார்ட் போன் சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் விதமாக அசென்ட் பி6 கைபேசி லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
120 கிராம் எடை மட்டுமே உள்ள இந்த கைபேசியின் விலை 600 அமெரிக்க டாலர்களாகும். (இந்திய மதிப்புக்கு ரூ.35 ஆயிரத்து 300)
அடுத்த (ஜூலை) மாத இறுதிக்குள் சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 19 நாடுகளில் இந்த கைபேசி கிடைக்கும் எனவும், மேலும் 100 நாடுகளில் விற்பனை விரிவுப்படுத்தப்படும் என ஹூவாவே நுகர்பொருள் தயாரிப்பு நிறுவன செயல் அதிகாரி ரிச்சர்ட் யூ அறிமுக விழாவில் கூறினார்.
4.7 அங்குல "டச் ஸ்கிரீன்" பின்புறம் 8 எம்.பி. கேமரா, முன்புறத்தில் 5 எம்.பி. கேமரா மற்றும் சாம்சங் கேலக்சி எஸ்4, ஆப்பில் ஐ போன் 5 - 6க்கு இணையான அனைத்து சிறப்பம்சங்களும் தங்களின் தயாரிப்பான அசென்ட் பி6-ல் உள்ளதாக அவர் தெரிவித்தார்.