Sony அறிமுகப்படுத்தும் Xperia M ஸ்மார்ட் கைப்பேசிகள்

உயர்தரத் தொழில்நுட்பத்துடன் கூடிய இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தும் சோனி நிறுவனமானது தற்போது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Xperia M ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.
4 அங்குல அளவுடையதும், 854 x 480 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசிகள் Dual Core Qualcomm Snapdragon S4 Processor, பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
Android 4.1 Jelly Bean இயங்குதளத்தனை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இவற்றில் 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெராவும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக VGA கமெராவும்
காணப்படுகின்றது.
மேலும் இவற்றின் சேமிப்பு வசதியானது 4GB ஆக அமைந்துள்ளதுடன் microSD கார்ட்டின் உதவியுடன் 64GB வரை அதிகரிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem